இந்த சம்பவம் நவம்பர் 8ஆம் தேதி காலை இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வட்டள காவல் நிலைய அதிகாரிகள் அந்த காரை நிறுத்த முயன்றபோது அது வேகமாக சென்றதால், துரத்திச் சென்ற போலீசார் பின்னர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஓட்டுநர் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கியும் ஒரு மாசகசீனும் (magazine) கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆயுதம் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதாக இருந்தது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மபோல் பகுதியில் அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வட்டள காவல்துறை, இந்த துப்பாக்கி குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படவிருந்ததா என்பதை அறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.




























