ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ள இறுதிப்போட்டியில் சுமார் 11 நிமிடங்கள் கொண்ட இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. இதற்காக மேடை அமைத்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்கும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் மொத்த இடைவேளை 15 நிமிடத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து விதிகளை வகுக்கும் IFAB விதிகளின்படி இடைவேளை பொதுவாக 15 நிமிடங்களாக இருக்க வேண்டும். இருப்பினும் உலகக் கோப்பை போட்டி விதிமுறைகளில் 15 நிமிட இடைவேளை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கட்டாய உச்சவரம்பா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இதுகுறித்து FIFA இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை.
அமெரிக்க விளையாட்டு நிகழ்வுகளைப் போன்ற அனுபவத்தை உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் வழங்கும் முயற்சியாக இந்த Halftime Show அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் கால்பந்து பாரம்பரியம் குறித்த விவாதமும் உருவாகியுள்ளது.





























