இலங்கை அரசினால் காலத்திற்கு காலம் மாற்றப்படுகின்ற இந்த பட்டியல் விபரம் கடந்த 2025 பிப்ரவரி மாதம் 20 ம் திகதி வெளியிடப்பட்ட 2424/51ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர் விபரங்கள் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தை பின்பற்றி இலங்கை அரசானது 29 மே 2025 அன்று புதிதாக திருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிட்டிருந்தது.
விபரம்
காலத்துக்கு காலம் திருத்தப்படுகின்ற இந்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்து மற்றும் ஏனைய முக்கிய குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற, தேடப்படுகின்ற அல்லது தண்டனை விதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் வசித்து வருகின்ற முக்கியமான குற்றவாளிகளின் பெயர் விவரங்களும் உள்ளடக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அன்று 2424/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலில் சிறிய திருத்தங்களை உட்படுத்தி 29/05/2025 அன்று புதிதான பட்டியலை இலங்கை அரசு 2438/47 ஆம் இலக்க வர்த்தமானியில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான முழு விவரங்கள் பெயர் விபரங்கள் அமைப்புகள் சகல விடயங்களும் கீழ்வரும் பக்கங்களில் உங்களால் காணக் கூடும்.
ஒரு சில பாதுகாப்பு காரணங்களால் அவருடைய முகவரி விபரங்கள் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. உங்களால் இலகுவாக அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தேவையான பெயர் விபரங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சில விடயங்கள் கீழ்வரும் தரவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது இது தவிர்த்து மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழே இணைக்கப்பட்டுள்ள அரச வர்த்தமானி இணைப்பை பயன்படுத்தி நீங்கள் அது தொடர்பாக தெரிந்து கொள்ள முடியும்.
தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர் விபரங்கள்

















































