குவைத் அரசு தற்போது “work visa transfer” கட்டண வரையறையில் மாறுதலை கொண்டு வந்துள்ளது. இப்போது குவைத் அரசு அனைத்து வேலை விசா பரிமாற்றங்களுக்கும் ஒரே கட்டணமாக KD 150 (குவைத் தினார்) நிர்ணயித்துள்ளது.

இந்த மாற்றமானது 1 ஜூன் 2005 இல் இருந்து நடைமுறையில் இருக்கும் எனவும், Ministerial Resolution No. 4 of 2025 என்பதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குவைத் அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துறை சார்ந்த கட்டணங்கள்

முன்னர் துறை சார்ந்த ரீதியில் சுகாதாரம், கல்வி, அரசாங்கம் மற்றும் தனியார் சேவை துறைகள் என தனித்தனி கட்டணங்கள் அறவிடப்பட்டிருந்தன.

அரசு நிறுவனங்கள்

மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள்

தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விளையாட்டு சங்கங்கள், விவசாய, தொழிற்துறை நிறுவல்கள் போன்றல்லாது..

இனிவரும் காலங்களில் அனைத்து துறை சார்ந்த விசா மாற்று வேலைகளுக்கான கட்டணங்கள் 150 குவைத் தினாராகவே காணப்படும். இதன் நிமிர்த்தம் உள்ளூர் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading