தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அதன் நோக்கம் செயற்பாட்டு திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அரசியல் கூட்டிணைவு தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த குரலை உருவாக்கும் முயற்சியாக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.































