பான் இந்தியா நடிகர்கள் குறித்து பேச்சுவார்த்தை
அஜித்தின் விருப்பத்துக்கு ஏற்ப கதை அமைந்துள்ளதாகவும், படத்தைப் பெரிய அளவில் பான் இந்தியா படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரது மேலாளர் கேட்ட தொகை தயாரிப்புத் திட்டத்துக்கு ஏற்றதாக இல்லாததால், உன்னி முகுந்தனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கன்னடத்தில் கிச்சா சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தேதிகள் கிடைக்காததால் தற்போது உபேந்திராவிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் Ajith AK 64 Daredevil படத்தில் பல மொழித் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
‘டேர்டெவில்’ என்ற பெயர் ஆடிப்பெருக்கு நாளில் அறிவிக்கப்பட்டது. படத்தைத் தயாரிக்க பலர் முன்வந்தபோதும், பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடி முடியாததால், அஜித் தனது நீண்டகால கொள்கையை மாற்றி, மனைவி ஷாலினியின் பெயரில் சொந்தத் தயாரிப்பில் படத்தை உருவாக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























