இரு நாடுகளின் படையினரிடையே பரஸ்பரப் பரிமாற்றம்
இதேவேளை, இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழு, பரஸ்பர கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒக்டோபர் 8ஆம் திகதி இந்தியா புறப்பட்டுச் சென்றது. India Sri Lanka Tri-Forces Cultural Tour இரு நாடுகளின் இராணுவத்தினருக்கும் அனுபவங்கள், கலாசார மதிப்புகள் மற்றும் அறிவைப் பகிரும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த முயற்சி இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையிலான பரஸ்பரப் புரிதல், நட்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரின் நேரடி கலந்துரையாடல் மற்றும் கலாசாரப் பரிமாற்றம், இருதரப்பு உறவுகளில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.































