சுவிட்சர்லாந்தின் பிரபல ஸ்கீ சுற்றுலா நகரமான கிரான்ஸ்-மோண்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உள்ளூர் பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கடுமையாக காயமடைந்தவர்களுக்கும் சுவிஸ் அரசு தலா 50,000 சுவிஸ் பிராங்க் (சுமார் 56,000 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த தீ விபத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உதவி தொகை உடனடி நிதி உதவியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான சட்ட மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading