ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த இளைஞர்களை போலீசார் உடனுக்குடன் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஜேபிக்கு ஆதரவாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அமைதிவழியில் போராடுவது ஜனநாயக உரிமை என்றும், எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லி மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் அடக்குமுறைகள், தாம் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுவதுடன், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறை ஏவப்படுவதாகக் கூறி, தவெக அரசையும் அவர் கண்டித்துள்ளார். Delhi protest crackdown நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

































