துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்த சந்தேகநபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மவுண்ட் லவினியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலதிக விசாரணை
பொலிஸ் சாலைத் தடுப்பில் கடமையில் இருந்தபோது தனது சேவைத் துப்பாக்கியைத் திருடி, குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் ஒப்படைத்த பின்னர் அவர் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான சந்தேகநபர் அனுராதபுரம், பெமடுவ, ஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்.
Dubai police constable arrest நடவடிக்கையின் பின்னர், அவர் இன்று அதிகாலை 5.20 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-226 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்தனர். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட உள்ளார்.

































