Sony தனது இணையதளத்தில் PS5 தற்போது கையிருப்பில் இல்லை என்றும், விரைவில் மீண்டும் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், Vinted, Leboncoin, Amazon, eBay உள்ளிட்ட தளங்களில் சில PS5 சாதனங்கள் 1,000 யூரோக்களுக்கும் அதிகமாக பட்டியலிடப்பட்டுள்ளன. சில விளம்பரங்களில் விலை மிகவும் குறைவாகக் காட்டப்படுகிறது. Sony நிர்ணயித்த விலை 649.99 யூரோக்கள் ஆகும்.
புகைப்படம் மட்டும் விற்பனை செய்யும் விளம்பரங்கள்
ஒரு Vinted விளம்பரத்தில் PS5, கட்டுப்படுத்தி மற்றும் அசல் பெட்டி இடம்பெற்ற புகைப்படத்துடன், சாதனம் கிட்டத்தட்ட 300 யூரோக்களுக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் விளம்பரத்தின் இறுதியில், PS5 Slim-ன் புகைப்படம் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், உண்மையான கன்சோல் அல்லது துணைக்கருவிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குறிப்பு மட்டும் சட்ட நடவடிக்கையிலிருந்து விற்பனையாளர்களைக் காப்பாற்றாது என நுகர்வோர் சட்ட வழக்கறிஞர் கிரெகோரி ரூலான் தெரிவித்துள்ளார். அதிகப்படியான விலை நிர்ணயம் தொடர்பாக பிரான்ஸ் குடியியல் சட்டத்தின் 1165ஆம் பிரிவின் கீழ் இழப்பீடு அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றத்தை அணுகலாம்.
மேலும், வாங்குபவரைத் திட்டமிட்டு குழப்பும் நோக்கம் இருந்தால் மோசடி வழக்கும் தொடரப்படலாம். குற்றவியல் சட்டத்தின் 313-1ஆம் பிரிவின்படி, சாதாரண மோசடிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 357,000 யூரோக்கள் அபராதம் விதிக்கலாம். கடுமையான சூழ்நிலைகளில் 7 ஆண்டுகள் சிறை, 750,000 யூரோக்கள் அபராதம் விதிக்கலாம். ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகச் செய்யப்பட்டால், தண்டனை 10 ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் யூரோக்கள் அபராதமாக உயரலாம். PS5 photo scam விளம்பரங்களை வாங்குபவர்கள் முழுமையாகச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.































