தியான்காங் நிலையத்தில் அறிவியல் ஆய்வுகள்
இந்தப் பயணம் சுமார் ஐந்து நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தியான்காங் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஷென்சோ-23 விண்கலத்தில் குழுவினர் பூமிக்குத் திரும்ப உள்ளனர். முகமது ஜீஷான் அலி சுற்றுப்பாதையில் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்.
எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் ஆதாரமாக பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய, நுண்ணுயிர் பாசிகளை வளர்ப்பது இதில் அடங்கும். குவினோவா விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கம் குறித்தும் சோதனை நடத்தப்பட உள்ளது. Pakistani astronaut Shenzhou-24 பங்கேற்கும் இந்தப் பயணம் சீனா–பாகிஸ்தான் விண்வெளி ஒத்துழைப்பின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தனது பயணத்தில் 25 கோடி பாகிஸ்தானியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்வதாக முகமது ஜீஷான் அலி கூறியுள்ளார். இந்தப் பணி இரு நாடுகளின் நீடித்த நட்பை வெளிப்படுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
2023 அக்டோபரில் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்வெளிச் சுற்றுலா பயணத்தில் பங்கேற்ற நமீரா சலீமுக்குப் பிறகு, விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது பாகிஸ்தானியர் முகமது ஜீஷான் அலி ஆவார்.





























