தீச்சம்பவம் பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காகித ஆலையில் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருட்கள் அந்தப் பகுதியில் சேமிக்கப்பட்டிருந்தன.
பல பிரிவுகள் இணைந்து நடவடிக்கை
தீ பரவியதைத் தொடர்ந்து, காகித ஆலையின் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இலங்கை இராணுவப் பணியாளர்களும் நடவடிக்கையில் இணைந்தனர்.
பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் சேவனகல சர்க்கரை தொழிற்சாலை பணியாளர்களும் தீயணைப்பு பணிகளில் பங்கேற்றனர்.
பல பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஆலையின் பிற பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
காரணம் தொடர்பில் விசாரணை
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






























