குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நீண்டநாள் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமீப வாரங்களாக பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் மற்றும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காட்டுத்தீ அபாயம் நீர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளன. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து Météo-France வெளியிடும் புதிய அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.




























