மாணவர்களுக்கான கட்டாய நேர்காணல்
மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டுதோறும் கட்டாய நேர்காணல் நடத்த முன்மொழிவு திட்டமிடுகிறது. இதன் மூலம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் அல்லது குடும்ப வன்முறைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புகார் அளிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பாதிக்கப்பட்டவரையும் சந்தேக நபரையும் விசாரித்தல், ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொடர்புடைய பிற பாதிக்கப்பட்டவர்களைத் தேடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச விசாரணை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் புகார்கள் நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க முடியும்.
சிறப்பு நீதித்துறை மற்றும் நிதித் தேவை
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகள் தொடர்பாகப் பயிற்சி பெற்ற இரண்டு நீதிபதிகளும் ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞரும் இருக்க வேண்டும் என மசோதா கூறுகிறது. பாலியல் பலாத்கார வழக்குகள் தொடர்ந்து குற்றவியல் நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த குறைந்தபட்சம் 3 பில்லியன் யூரோ தேவை என 200 அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. France sexual violence law மசோதாவின் பரிசீலனை அடுத்ததாக செனட்டில் நடைபெறும். 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என அதன் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.





























