2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட Décret n° 2026-723 மூலம் அதிகாரப்பூர்வமாக நீச்சல் அல்லது நீர் விளையாட்டு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறுவோருக்கு காவல்துறையினர் அபராத நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
நகராட்சி அல்லது Préfecture உத்தரவின் மூலம் நீச்சல் தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்துவது சிவப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தும் கடலில் அல்லது நீரில் இறங்குவது தடை செய்யப்பட்ட பகுதியில் canoe paddle kayak போன்ற நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை இந்த விதியின் கீழ் வருகின்றன. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து தொடர்பான சில காவல்துறை தடைகளை மீறுவதும் இதில் அடங்கும்.
இந்த விதிமீறல் 3ஆம் வகை contravention ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கு Police Tribunal வரை சென்றால் அதிகபட்சமாக 450 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம்.
உதாரணமாக ஆபத்தான கடல் நீரோட்டம் மாசுபாடு அல்லது வேறு பாதுகாப்பு அபாயம் காரணமாக ஒரு கடற்கரையில் சிவப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தாலோ அல்லது நீச்சல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ அந்த எச்சரிக்கையை மீறி ஒருவர் நீரில் இறங்கினால் தற்போது அபராத நடவடிக்கைக்கு உள்ளாகலாம்.
இந்த புதிய நடவடிக்கை நீரில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதுடன் அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு உத்தரவுகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

































