ஹங்கேரிக்கு அனுப்பப்படுவார் என்ற அச்சம்
இந்தத் தீர்ப்பின் மூலம், Gino முதலில் ஜெர்மனி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார். அதன் பின்னர் தன்னை ஹங்கேரிக்கு அனுப்ப ஜெர்மனி நடவடிக்கை எடுக்கக்கூடும் என அவர் அஞ்சுகிறார். புடாபெஸ்டில் 2023 பிப்ரவரியில் ஜெர்மன் நவ-நாஜி குழுவினர்மீது தடிகள் மற்றும் சுத்தியலால் நடத்தப்பட்ட தாக்குதலில் வன்முறையில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஹங்கேரியில் அதிகபட்சம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெர்மனியில் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு சட்ட ஆலோசனையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே மேல்முறையீட்டை நிராகரித்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
Gino-வின் வழக்கறிஞர் லோரான் பாஸ்கே-மரினாக்ஸ், பிரான்ஸ் நீதிமன்றத் தீர்ப்பு அவரது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொள்ளவில்லை என விமர்சித்தார். அவருக்கு ஆதரவளிக்கும் LFI கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் போர்ட்டும், இந்த முடிவு அவரது உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எனக் கூறினார்.
Gino-வுக்கு இடதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் 2022-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற அன்னி எர்னோ உள்ளிட்ட கலாச்சாரப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Gino extradition case குறித்து பாரிஸில் ஆதரவு கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



























