ஆந்திராவில் இருந்து தந்தங்கள் கொண்டு வரப்பட்டதாக விசாரணை
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானைத் தந்தங்கள் கொண்டு வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்–வேலூர் சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்களிடம் 2 தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தந்தங்களை கைப்பற்றிய வனத்துறையினர், 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் லத்தேரி அருகேயுள்ள பனமடங்கி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், ஒடுகத்தூர் அருகேயுள்ள பாக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி மற்றும் கோவிந்தராஜ் எனத் தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து பணம் கொடுத்து தந்தங்களை வாங்கி வந்ததாகவும், அவை இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவல்களில் முன்னுக்குப் பின் முரண்பாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Gudiyatham elephant tusk smuggling வழக்கில் கைப்பற்றப்பட்ட தந்தங்களின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






























