நடுவர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீண்டும் அதே தவறை செய்ததாக தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து 34 மற்றும் 37 ஆவது ஓவர்களில் தலா 5 ஓட்டங்கள் வீதம் மொத்தம் 10 ஓட்டங்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. இதனால் இந்தியா பெனால்டி தண்டனை மூலம் இந்தியா A அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
37 ஆவது ஓவரில் கிரீஸை நோக்கி ஓடும்போது அவர் பாதுகாக்கப்பட்ட பிட்ச் பகுதியை மீறியதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்பும் இதே விதிமுறை மீறல் நடந்திருந்ததால் தண்டனை கடுமையாக்கப்பட்டது.
இருப்பினும் இந்தியா A அணி மீட்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விப்ராஜ் நிகம் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே இணைந்து 8வது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் சேர்த்தனர். நிகம் 51 ஓட்டங்களும் ஷெட்கே 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதே போட்டியில் இலங்கை A அணிக்கும் முன்னதாக 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த போட்டி விதிமுறை மீறல்கள் காரணமாக பல திருப்பங்களை கண்டுள்ளது




























