சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் (SIT) இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஒன்பது வழக்குகளில், விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண் 11/2026 வழக்கில் 11.11.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கியதுடன், குற்றப்பத்திரிகை நகல்கள் 17.11.2026 அன்று எதிரிகளுக்கு வழங்கப்பட்டன.
மற்றொரு வழக்கான விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண் 12/2026-ல் 23.11.2026 அன்று எதிரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. Jem Veeramani cases தொடர்பான மீதமுள்ள வழக்குகளிலும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தலைமறைவாக உள்ள பிரகாஷ் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய Blue Corner Notice வெளியிடப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வழக்குகளிலும் துரித விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























