‘ஜென்டில்மேன்’ மறுவெளியீட்டின் சிறப்பு
அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கே.டி. குஞ்சுமோன் தயாரித்த இப்படம், அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன், இந்த மறுவெளியீடு முந்தைய தலைமுறையினருக்கு ஏக்கத்துடன் கூடிய நினைவுகளைத் தூண்டும் என்றும், புதிய தலைமுறையினர் படத்தின் காட்சி நேர்த்தியையும் இசையையும் பெரிய திரையில் அனுபவிக்க இது வாய்ப்பளிக்கும் என்றும் தெரிவித்தார்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு படம் மீண்டும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, தாம் தயாரித்த ‘காதல் தேசம்’, ‘ரட்சகன்’, ‘சூரியன்’ ஆகிய படங்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், ‘ஜென்டில்மேன் 2’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். Gentleman 4K re-release படத்தின் புதிய காட்சித் தரத்தையும் இசையையும் திரையரங்குகளில் ரசிக்க ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.































