தருண் தேஜா இயக்கும் புதிய படம்
வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ என்ற உளவியல் ஹாரர் படத்தின் மூலம் கவனம் பெற்ற தருண் தேஜா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் ஹாரர் கதைக்களத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஹெச்கே’ ஆகிய படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா இப்படத்தைத் தயாரிக்கிறார். புதிய Shruti Haasan horror film குறித்த மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.































