கலா வாவி(Kala Wewa) நீர்த்தேக்கத்தின் ஸ்பில் வே பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜரட்ட பிரதேச விவசாயிகளுக்கான முக்கிய நீர்வளங்கள் பெருமளவில் வீணாகி வந்துள்ளன.அரசு இந்த பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் கண்டு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த கலா வாவி பழுது வேலை திட்டம் Integrated Water Productivity and Water Resources Management Project நிதியுதவியுடன் மகாவலி அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.மொத்த முதலீடு ரூ. 75 மில்லியனை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நீர் வீணாவதை குறைத்து விவசாயத்துக்கு நிலையான நீர் வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























