பெண்களை தடை செய்யப்பட்ட பணிகளில் அமர்த்துவது குறித்தும் புகார் அளிக்கலாம்
மனிதக் கடத்தலை எதிர்க்கும் உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையைப் பாதுகாப்பதும், தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கங்களாகும்.
பெண்கள் பணியாற்றுவது தடை செய்யப்பட்ட வேலைகளில் அவர்களை நியமிப்பது, அல்லது ஆண்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பெண்களைப் பணியமர்த்துவது போன்ற மீறல்கள் குறித்து இந்தச் சேவை மூலம் தகவல் அளிக்கலாம்.
‘சஹெல்’ செயலி வழியாக பொதுமக்கள் இந்தப் புகார்களை மின்னணு முறையில் சமர்ப்பிக்கலாம் என்று PAM தெரிவித்துள்ளது. தொழிலாளர் சந்தையில் இடம்பெறும் மீறல்களை கண்காணிக்கவும், ஆணையத்தின் மேற்பார்வைப் பணிக்கு ஆதரவளிக்கவும் பொதுமக்கள் பங்களிக்க வேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டுள்ளது. Kuwait PAM Report Me service மூலம் புகார் அளிக்கும் நடைமுறை பொதுமக்களுக்கு எளிதான மின்னணு வழியாக அமைந்துள்ளதாக PAM கூறியுள்ளது.






























