பத்லாப்பூர் பகுதியில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருமுட்டை எடுக்கப்பட்டதாக கூறப்படும் பத்லாப்பூர் கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது டாக்டர் சுலக்சனா உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
40க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை
விசாரணையில், ஏழைப் பெண்களிடம் கருமுட்டை தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறி அவர்களை அழைத்து வந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதிகளைத் தேடும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்களிடம் கருமுட்டை எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணிடம் மட்டும் 33 முறை கருமுட்டை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
டாக்டர் சுலக்சனா தனது வீட்டையே கிளினிக்காக மாற்றி இந்த நடவடிக்கைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. கருமுட்டை வெளியேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் மருந்துகள் முறையாக சேமிக்கப்படவில்லை என்றும், சட்டவிரோத சோனோகிராபி மற்றும் பாதுகாப்பற்ற செயற்கை கருத்தரிப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Maharashtra illegal egg extraction வழக்கில் தொடர்புடைய ஏஜெண்டுகள், மருத்துவர்கள் மற்றும் கிளினிக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களைத் தேடி அழைத்து வருவதில் கிளினிக்குகளின் பங்கு என்ன என்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.





























