Merchant Navy Day நிகழ்வுடன் இணைந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலக வர்த்தகம், சுற்றுலா மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வணிகக் கப்பல் பணியாளர்கள் முக்கிய பங்களிப்பு செய்கின்றனர். பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மூலம் விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து இயங்குகின்றன.
Merchant Navy Medal பெற்ற முக்கிய கடல்சார் பணியாளர்கள்
ஓல்ட்ஹமைச் சேர்ந்த 31 வயதான கேப்டன் ஜோ ஃபர்னஸ், சமூக ஊடகச் சேனல் மூலம் மில்லியன் கணக்கான இளைஞர்களை கடல்சார் பணிகளுக்கு ஈர்த்துள்ளார். அவர் 100-க்கும் மேற்பட்ட கேடட்டுகள் மற்றும் இளநிலை அதிகாரிகளுக்கு வழிகாட்டியுள்ளார்.
கொரோனா தொற்றின் தொடக்க காலத்தில், அவரது கப்பலில் 10 பயணிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். குறைந்த மருத்துவ வசதியிலும் அவர்களை கவனித்ததற்காக ஹொங்கொங் அரசின் விருதை அவர் பெற்றிருந்தார். புதிய கேடட்டுகள் ஆதரவு பெற வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மார்டெல் ஃபர்ஸ்டன், தி லண்டி கம்பெனியின் வரலாற்றில் முதல் பெண் கேப்டனாகப் பணியாற்றியவர். பெண்களுக்கான வழிகாட்டல் வலையமைப்பை உருவாக்கிய அவர், 15 கப்பல்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மறுஎழுதியுள்ளார். சிக்கிய கடல்பணியாளர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றார்.
ஜெர்சியைச் சேர்ந்த 87 வயதான கேப்டன் பிரையன் நிப்ஸ், ஐந்து தசாப்தங்களாக கடல்சார் துறையில் சேவை செய்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஜெர்சிக்கு அருகே மூன்று மீனவர்கள் உயிரிழந்த L’Ecume II படகு விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் ஆதரவளித்தார். 1997 முதல் 2004 வரை ஜெர்சி துறைமுகத் தலைவராகவும் பணியாற்றினார்.
விருது வழங்கும் நிகழ்வு
கடல்சார் சமூகத்துக்கு செய்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த ஆண்டின் 11 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Merchant Navy Medal பதக்கங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் அரச விழாவில் வழங்கப்படும்.






























