தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஆதார் அட்டையை தீவிரவாதிகள் பயன்படுத்தியது, பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபாடு மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு போன்ற காரணங்களை கூறி அவர்கள் மிரட்டியுள்ளனர். தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் போலி விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை ‘டிஜிட்டலில் கைது’ செய்ததாக நம்ப வைத்துள்ளனர்.
முதியோரிடம் பணம் மாற்றச் செய்த சைபர் குற்றவாளிகள்
மும்பை சுன்னாப்பட்டியைச் சேர்ந்த 61 வயது ஓய்வு பெற்ற ஆசிரியையிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எனக் கூறியவர்கள் போலி ஆவணங்களை அனுப்பி பணம் பெற்றுள்ளனர். பயங்கரவாதி ஆசிப் பௌஜிக்கு நிதியுதவி செய்ததாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.89 லட்சம் பறிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மலாடு மேற்கு பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவரிடம், ஐபிஎஸ் அதிகாரி விஸ்வாஸ் நங்கரே பாட்டீல் மற்றும் நாசிக் காவல் நிலையத்தைச் சேர்ந்த சந்தீப் ராவ் என அறிமுகமானவர்கள் ரூ.89.8 லட்சம் மோசடி செய்துள்ளனர். முலுண்டைச் சேர்ந்த 69 வயது முதியவரிடம் ரூ.12 லட்சமும், காந்திவலியைச் சேர்ந்த 86 வயது முதியவரிடம் ரூ.25 லட்சமும், பவாய் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரிடம் ரூ.11 லட்சமும் பறிக்கப்பட்டுள்ளது.
மும்பை சைபர் பிரிவு துணை காவல் ஆணையர் பஜ்ரங் பன்சோடே, தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலம் எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என எச்சரித்துள்ளார். இந்த Mumbai digital arrest scam குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





























