எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில், தேர்வின்போது தனது மொபைல் போன் மூலம் வினாக்களை ChatGPT-யில் பதிவேற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியர் இதைக் கண்டுபிடித்தார். எனினும், அவர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாணவர் போராட்டம்; விசாரணைக்கு உறுதி
ஆசிரியரும் துறைத் தலைவரும் சாஹிலிடம் பேசி ஆலோசனை வழங்கினர். இந்தச் சம்பவம் அவரது கல்வியை பாதிக்காது என்றும் உறுதியளித்தனர். பின்னர் விடுதி அறைக்குச் சென்ற அவர், மாலையில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஐஐடி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவர்கள், நண்பர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தது. மரணத்திற்கான சூழ்நிலைகள் உரிய அதிகாரிகளால் விசாரிக்கப்படும் என்றும் கூறியது.
Mumbai IIT student suicide செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழுமையான உண்மையை நிர்வாகம் வெளியிடவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். ஓராண்டு இடைநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சமும், அதனால் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் சாஹிலுக்கு ஏற்பட்டிருக்கலாம் என சக மாணவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆறு மாதங்களில் மும்பை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.































