திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த ரயில், ஹேண்ட்பிரேக் பழுதைச் சரிசெய்ய யார்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் பெட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது, கடும் துர்நாற்றம் வீசியது. சோதனையில் இருக்கைக்குக் கீழ் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை
பிரேதப் பரிசோதனையில் இறந்த பெண்ணுக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என்றும், இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் இருந்ததும் தெரியவந்தது. அவர் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்ததால் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாகர்கோவில் மற்றும் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவில் நடைமேடை எண் 5-ல் அதிகாலை தனியாக வந்த பெண்ணை, செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் (31) பிடித்து மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் இழுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் ஐயப்பனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த Nagercoil railway murder case-ல் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






























