ரயில் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்
திருவனந்தபுரத்தில் இருந்து 11ஆம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயில், ஹேண்ட்பிரேக் பழுதை சரிசெய்வதற்காக ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலை இயக்குவதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டபோது, ஒரு பெட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
சோதனையில் இருக்கைக்குக் கீழ் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என்பதும், இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவர் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இரண்டு தனிப்படைகள் விசாரணை நடத்தின. திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் நிலையங்களின் சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
கடந்த 14ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், நாகர்கோவில் ரயில் நிலையத்தின் 5ஆம் நடைமேடையில் தனியாக வந்த பெண்ணை ஐயப்பன் இழுத்துச் சென்று மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை தாக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. Nagercoil railway murder தொடர்பான விசாரணையில், ஐயப்பன் கடந்த நான்கு மாதங்களாக ரயில் நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது.






























