சகோதரியை கொலை செய்த வழக்கு
நெரூல் பகுதியை சேர்ந்த 36 வயதான நாகேஷ் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். தனது மனைவி ஜோத்சனாவுக்கு, தனது சகோதரியின் கணவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவர் சந்தேகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
2019ஆம் ஆண்டு, மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்ற நாகேஷ், ஜோத்சனாவை கத்தியால் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நெரூலில் உள்ள தனது சகோதரி சுனிதாவின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தார். அவரை அமைதிப்படுத்த முயன்ற சுனிதாவை, நாகேஷ் மார்பில் பலமுறை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
நெரூல் போலீஸார் 24 மணி நேரத்தில் நாகேஷை கைது செய்தனர். கடந்த 7 ஆண்டுகளாக தலோஜா சிறையில் இருந்த அவர் மீதான வழக்கு பேலாப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
சுனிதா கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் நீதிபதி வழங்கினார். தீர்ப்புக்குப் பிறகு போலீஸாரும் நீதிமன்ற ஊழியர்களும் நடைமுறைகளை முடித்துக்கொண்டிருந்தபோது, நாகேஷ் திடீரென பால்கனிக்கு ஓடி குதித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த Navi Mumbai court suicide சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






























