பாரிஸில் நடந்த கொலை மற்றும் கைது
ரெனீ முதுகைக் காட்டியபடி வாசித்துக்கொண்டிருந்தபோது, சகாவா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலைச் சிதைத்த அவர், மீதமிருந்த பகுதிகளை இரண்டு சூட்கேஸ்களில் வைத்து பாய்ஸ் டி பொலோன் பூங்காவில் விட்டுச் சென்றார். சூட்கேஸ்களில் இருந்து ரத்தம் வழிந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். டாக்ஸி ஓட்டுநரின் உதவியுடன் சகாவா கைது செய்யப்பட்டார்; தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
பிரான்ஸ் மருத்துவர்கள், சகாவா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியற்றவர் என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சிறைக்கு அனுப்பப்படாமல் மனநலக் காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் பிரான்ஸ் நீதிமன்றம் வழக்கை கைவிட்டதாகவும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.
சட்ட இடைவெளியால் கிடைத்த சுதந்திரம்
ஜப்பானிய மருத்துவர்கள் அவருக்கு மனநலப் பிரச்சினை இல்லை எனக் கூறிய நிலையில், அந்நாட்டு சட்டப்படி அவரை மருத்துவமனையில் தொடர்ந்து வைக்க முடியவில்லை. அதேவேளை, பிரான்ஸ் வழக்கு முடிவடைந்திருந்ததாலும் ஆவணங்கள் ஜப்பானுக்கு வழங்கப்படாததாலும் புதிய வழக்கு தொடரப்படவில்லை. இதனால் 1986 ஆகஸ்ட் 12 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
பின்னர் தனது குற்றத்தை மையமாகக் கொண்டு புத்தகங்கள் எழுதினார், ஊடகங்களில் தோன்றினார் மற்றும் திரைப்பட, ஆவணப்பட முயற்சிகளில் பங்கேற்றார். 2013ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், 2022 நவம்பர் 24 அன்று டோக்கியோவில் நிமோனியாவால் 73 வயதில் உயிரிழந்தார். Issei Sagawa case, நாடுகளுக்கிடையிலான சட்ட நடைமுறைத் தொடர்பின்மையும் குற்றத்தைச் sensationalise செய்த ஊடகப் போக்கும் எழுப்பிய கேள்விகளால் தொடர்ந்து பேசப்பட்டது.






























