தேவா கடந்த அக்.17-ம் தேதி காலமானார். அவரது பிறந்தநாளான நவ.20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா, தேவாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தேவாவுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஸ்ரீகாந்த் தேவா, தேவாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவர் வசித்த தெருவுக்கு தேவாவின் பெயரைச் சூட்ட வேண்டும், நவ.20-ம் தேதியை கானா தினமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். தேவாவின் இசைப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் Deva memorial hall அமைக்கப்பட வேண்டும் என்பதே அவரது முக்கியக் கோரிக்கையாகும்.
































