தற்கொலைக் கடிதம் குறித்து விசாரணை
கன்னியாகுமரி அருகேயுள்ள வட்டக்கோட்டை – பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுதாகர் வசித்து வந்தார். லாரி ஓட்டுநராக பணியாற்றிய அவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தன்னைத் தேடி வந்து மீண்டும் வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும், காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியதாக சுதாகர் தனது உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் கடந்த ஒரு மாதமாக அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக வீட்டுக்குச் செல்லாத சுதாகரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், அதே பகுதியிலுள்ள தோட்டத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கைப்பற்றப்பட்ட கடிதத்தில், சந்தோஷமாக வாழ முடியவில்லை என்றும், தற்கொலைக்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த Kanyakumari driver suicide விவகாரத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

































