ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 45 வயதான விஜயசாரதி, ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் மாணவிகள் நால்வருக்கும் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் புகார்; ரகசிய விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை
தொடர்ச்சியான தொல்லையால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவிகள், இந்த விவகாரத்தைப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மகளிர் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நலக் குழுவினர் பள்ளிக்குச் சென்று ரகசிய விசாரணை நடத்தினர். புகார் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆசிரியர் விஜயசாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். Erode POCSO case தொடர்பாக ஆசிரியரின் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

































