79 வயதான ஷேக் ஹசீனா, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் அரசு விமான சேவை மூலம் வங்கதேசம் திரும்ப விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்புவதற்கு வங்கதேச அரசின் நிபந்தனை
எனினும், ஷேக் ஹசீனா நாடு திரும்ப வேண்டுமெனில் நாடு கடத்தல் நடைமுறை வழியாக மட்டுமே வர முடியும் என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இதனால் அவரது திரும்பும் திட்டம் தொடர்பாக அரசியல் மற்றும் சட்டரீதியான பதற்றம் நீடிக்கிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது Sheikh Hasina return Bangladesh திட்டம் அந்நாட்டின் அரசியல் சூழலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. டிசம்பர் 16 தேதியை அவர் தேர்வு செய்திருப்பது, நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுடன் அவரது வருகையை இணைக்கிறது.





























