1990 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில் வெளியான முதல் இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு, இந்தத் தொடரின் அடுத்த பாகம் தற்போது தொடக்ககட்ட மேம்பாட்டில் உள்ளது. இதன் திரைக்கதையை சேத் ரோஜன் மற்றும் இவான் கோல்ட்பெர்க் எழுதுகின்றனர். அவர்கள் தங்களின் பாயின்ட் கிரே நிறுவனத்தின் மூலம் படத்தைத் தயாரிக்கவும் உள்ளனர்.
புதிய பாகம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை
புதிய படத்தின் கதைக்களம் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சேத் ரோஜன் மற்றும் இவான் கோல்ட்பெர்க் தற்போது யூனிவர்சலுக்காக ஒரு திகில் படத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்தப் படம் முடிந்த பிறகு Home Alone 3 Macaulay Culkin திரைப்படப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த அறிவிப்பு, முதல் இரண்டு படங்களை இயக்கிய கிறிஸ் கொலம்பஸ், கேத்ரின் ஓ’ஹாரா மறைவுக்குப் பிறகு தொடர்ச்சிப் படம் சாத்தியமில்லை என்று கூறியிருந்த நிலையில் வெளியாகியுள்ளது. கெவினின் தாயாக நடித்த ஓ’ஹாரா, படத்தின் உணர்ச்சிகரமான மையத்தில் முக்கிய பங்காற்றியதாக கொலம்பஸ் குறிப்பிட்டிருந்தார். மக்காலே கல்கின் சமீபத்திய விளம்பரத்தில் கெவின் வேடத்தில் தோன்றியதை அவர் பாராட்டியிருந்தார்.
































