தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோ இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம்
வருகை தந்த தாய்லாந்து அமைச்சருடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்குவதுடன், மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்தார். நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதில் இது முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. Sri Lanka Thailand visa-free travel ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளின் அமைச்சரவைகளும் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தன.
































