கட்டண மென்பொருட்களுக்கு மாற்று உருவாக்கும் முயற்சி
இந்த இயக்கம் அக்டோபர் நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. SalesCompel மற்றும் ZeroAuthy ஆகிய இரண்டு திட்டங்கள் முதற்கட்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. SalesCompel, வாடிக்கையாளர் மேலாண்மைக்கான Salesforce மென்பொருளுக்கு மாற்றாகவும், ZeroAuthy அணுகல் மேலாண்மை சேவையகத்துக்கு மாற்றாகவும் வடிவமைக்கப்படுகிறது. இரு திட்டங்களும் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன.
மென்பொருட்களை உருவாக்கும்போது, பொதுவில் கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் திறந்த தரநிலைகளை மட்டுமே பயன்படுத்தும் ‘கிளீன் ரூம்’ முறையைப் பின்பற்றுவதாகக் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சட்ட வரம்புகளுக்குள் திறந்த மூல மாற்றுகளை உருவாக்க முயற்சி செய்கிறது. மென்பொருள் சந்தாக்கள், உரிமக் கட்டணங்கள் மற்றும் ஒரே தளத்தின் மீதான சார்பு ஆகியவற்றுக்கு எதிராக இந்த முயற்சி அமைந்துள்ளது.
குழுவின் பொறுப்பாளர்கள் யார் என்பது தெரியவில்லை. மூன்று தளங்கள் மூலம் நன்கொடைகள் கோரப்படுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகப் பணியாளர்களைக் குறைத்துக்கொண்டே செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதாகக் கூறப்படும் நிலையில், OccupySaaS open source software முயற்சி உருவாகியுள்ளது.
இதேபோல், Brandon Thomas உருவாக்கிய ArtCraft தொகுப்பில், Adobe மற்றும் Microsoft Office போன்ற கட்டண மென்பொருட்களுக்கு மாற்றாக இலவச திறந்த மூல செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளன. OccupySaaS open source software இயக்கம், மென்பொருள் உருவாக்குநர்கள் தங்களின் திறனை மீண்டும் பயன்படுத்தும் போராட்டமாக தன்னை முன்வைக்கிறது.






























