அம்மன்பேட்டை அருகே நேரிட்ட சாலை விபத்து
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த பெனாசிர் பேகம் (26), தனது மகன்கள் முகமது ஜாவீத் (12), முகமது ஜாசித் (10), முகமது ஹாலித் (5) ஆகியோருடன் டூவீலரில் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
கண்டியூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்றபோது, அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே பின்னால் வந்த கார் டூவீலரில் லேசாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய டூவீலர் மீது எதிரே வந்த சிமெண்டு ஏற்றிய லாரி மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
பெனாசிர் பேகம், முகமது ஜாசித் மற்றும் முகமது ஹாலித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த முகமது ஜாவீத் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Thanjavur road accident குறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குக் காரணமானதாக கூறப்படும் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கண்டியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Thanjavur road accident தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






























