இதேவேளை மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்நிலையை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
இதற்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை தற்போது பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்து சம்பவத்தின் பின்னணி மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.





























