பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிக காய்ச்சல் வயிற்றுப்போக்கு உணவின் மீதான விருப்பம் குறைதல் மற்றும் பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான கால்நடைகள் 14 முதல் 21 நாட்களுக்குள் குணமடைகின்றன என்றும், இதுவரை அதிக உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் Simbu குழுவைச் சேர்ந்ததாகவும் Shamonda வைரஸுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கொசு போன்ற இரத்தம் உறியும் சிறிய பூச்சிகள் மூலம் பரவக்கூடும் என கருதப்படுகிறது. குறிப்பாக கர்ப்பமான மாடுகளில் கருச்சிதைவு அல்லது கன்றுகளில் பிறவிக்குறைபாடுகள் ஏற்படுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போதைய அறிவியல் தகவல்களின் அடிப்படையில் இந்த வைரஸ் மனிதர்களுக்கு குறிப்பிடத்தக்க தொற்று ஆபத்தை ஏற்படுத்தும் என்ற ஆதாரம் இல்லை என ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் காலமாக இருப்பதால் மேலும் பல சம்பவங்கள் பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.































