பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி பண்டாரகம திசையில் இருந்து பயணித்த லொறி மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமாகச் சென்று எதிரே வந்த சொகுசு ஜீப்புடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த லொறி பின்னால் பயணித்த மற்றுமொரு காருடனும் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் நீண்ட நேரம் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.Sri Lanka News
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக செயற்படுமாறும் குறிப்பாக முந்திச் செல்லும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.



























