காவல் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தனது T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




























