Politics and Law
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது. நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகூன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த மசோதாவுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் தற்போது தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகளின் வாதங்கள் நிறைவடைந்த பின்னர், இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மசோதாவின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வத்தன்மை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட உள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டு, இரவு 10.30 மணி வரை சுமார் 12 மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Visa பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Visa பகுதியில் பார்க்கலாம்.




























