கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் மற்றும் நிதிப் பிரச்சினை தொடர்பாக சுபம் என்பவர் புனேயில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மாருதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர், வழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
ஆறு பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸார் தேடுதல்
மாருதி நீதிமன்ற வளாகத்தில் நின்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தோட்டாக்கள் குறி தவறியதைத் தொடர்ந்து, வாகனங்களில் வைத்திருந்த கூரிய ஆயுதங்களால் அவரது கையை வெட்டினர். பின்னர் அவரை மிரட்டிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
ரத்தக்காயங்களுடன் உதவி கேட்டு மாருதி அலறிய நிலையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Pune court attack தொடர்பாக, கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திலேயே பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து புனேவின் சட்டம்-ஒழுங்கு நிலையை பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே கேள்வி எழுப்பியுள்ளார்.

































