மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தாவை வீழ்த்தி அதிரடி.
மும்பை இந்தியன்ஸ் அணி 2026 ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை பெற்றது.
221 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கெல்டன் இணைந்து 148 ரன்கள் கூட்டணி அமைத்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். ரோஹித் 78 ரன்களும், ரிக்கெல்டன் 81 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன் 2012க்குப் பிறகு முதல் முறையாக தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது. 19.1 ஓவர்களில் 224/4 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிய மும்பை அணி இந்த சீசனில் வலுவான ஆரம்பத்தை பதிவு செய்துள்ளது.





Leave a Reply