இந்த பட்டியலில் 🇪🇺 ஐரோப்பிய ஒன்றிய (EU) மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (EEA) அனைத்து உறுப்பினர் நாடுகள், 🇬🇧 ஐக்கிய இராச்சியம் (United Kingdom), 🇺🇸 அமெரிக்கா (United States), 🇨🇦 கனடா (Canada), 🇦🇺 அவுஸ்திரேலியா (Australia), 🇳🇿 நியூசிலாந்து (New Zealand), 🇯🇵 ஜப்பான் (Japan), 🇰🇷 தென் கொரியா (South Korea), 🇸🇬 சிங்கப்பூர் (Singapore), 🇲🇾 மலேசியா (Malaysia), 🇮🇱 இஸ்ரேல் (Israel), 🇦🇪 ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates), 🇧🇷 பிரேசில் (Brazil), 🇦🇷 அர்ஜென்டினா (Argentina), 🇨🇱 சிலி (Chile), 🇺🇾 உருகுவே (Uruguay), 🇲🇽 மெக்சிகோ (Mexico), 🇨🇷 கோஸ்டா ரிக்கா (Costa Rica), 🇵🇦 பனாமா (Panama), 🇧🇳 புரூணை (Brunei), 🇭🇰 ஹொங்கொங் (Hong Kong SAR), 🇲🇴 மக்காவ் (Macau SAR) உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெறுகின்றன.
மேலும் பல லத்தீன் அமெரிக்கா கரீபியன் மற்றும் ஆசிய நாடுகளின் குடிமக்களும் குறிப்பிட்ட காலத்திற்கு விசா இல்லாமல் ருமேனியாவிற்குள் நுழைய முடியும்.
அதேபோல் செல்லுபடியாகும் ஷெங்கன் விசா அல்லது ஷெங்கன் நாடு வழங்கிய குடியிருப்பு அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் தனியாக ருமேனியா விசா பெறாமல் 90 நாட்கள் வரை குறுகிய காலத்திற்கு ருமேனியாவிற்கு பயணம் செய்ய முடியும்.
இலங்கையர் இந்த விசா இல்லா நாடுகளின் பட்டியலில் இல்லை. எனவே இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பொதுவாக ருமேனியாவிற்கு பயணம் செய்ய முன் விசா பெற வேண்டும்.
எனினும் விசா இல்லா நுழைவு என்பது வேலை செய்யவோ அல்லத நிரந்தரமாக தங்கவோ அனுமதி வழங்குவதில்லை. அது சுற்றுலா குடும்பச் சந்திப்பு அல்லது குறுகிய கால வணிகப் பயணம் போன்ற நோக்கங்களுக்கே பொருந்தும். அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்க விரும்புபவர்கள் ருமேனிய குடிவரவு அதிகாரிகளிடம் தேவையான அனுமதியைப் பெற வேண்டும்.






























