ரஷ்யா, உக்ரைன் மீது மீண்டும் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு முழுவதும் தொடர்ந்த தாக்குதலால் பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதுடன் கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் போர் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட மிக மோசமான இரவுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி ரஷ்யா பெருமளவிலான ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகை ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் பின்னர் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. மறுபுறம் இந்த நடவடிக்கை உக்ரைனின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதேவேளை அமைதி பேச்சுவார்த்தைகள் மந்தநிலையிலுள்ள சூழலில் இந்த தாக்குதல் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.













Leave a Reply