ஜெர்மனி, டென்மார்க், கிரீஸ், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த முயற்சியை முன்னெடுக்கின்றன. ருவாண்டாவில் அமைக்கப்படவுள்ள முதல் மையம் 2027ஆம் ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மையம்
ஐந்து நாடுகளில் ஒன்றில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீட்டுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் முடித்துள்ள சுமார் 100 வெளிநாட்டு குடிமக்களுக்காக இந்த மையம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இதில் தங்க வைக்கப்படுவர். சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளே அவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்கவுள்ளனர்.
இந்த முயற்சியை ஐரோப்பிய ஆணையம் வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆணையத்தின் பேச்சாளர் மார்கஸ் லாமர்ட் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த Rwanda return hubs திட்டம் எதிர்காலத்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் தாண்டி, புகலிடக் கோரிக்கையாளர்களையும் குறிவைக்கக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. அந்தக் கூற்றை திட்டத்தை முன்னெடுக்கும் ஐந்து நாடுகளும் மறுத்துள்ளன.
































